சென்னையில் கனமழை பெய்ய காரணம் என்ன? - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்

சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
சென்னையில் கனமழை பெய்ய காரணம் என்ன? - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
Published on

சென்னை எழிலகத்தில உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம்.

* நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

* பயிர்சேத விவரங்களை உடனடியாக கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

* கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

* தற்போதைய மழையில் 85 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

* கனமழையால் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

* நீர்நிலைகள் தூர்வாராதது தொடர்பாக இ.பி.எஸ். அரசியலுக்காக பேசுகிறார்.

* நாளை காலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com