

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி நடைபெற்று வருகிறது. ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர்.
* மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி நடைபெறுகிறது.
* தி.மு.க. தரப்பில் இருந்து பேரம் பேசப்படாத த.வெ.க. எம்எல்ஏக்களே இல்லை.
* கரூர் கம்பெனி, கரூர் கேங் நபர்கள் தான் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
* வாக்கிற்கு ரூ.2000 கொடுத்தும், ரூ.70 கோடி செலவழித்தும் த.வெ.க.வினர் வெல்லவில்லை.
* குதிரை பேரத்தில் ஈடுபடும் ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
* எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க கேவலமாக முயற்சித்து தான் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
* எப்போது தேர்தல் வந்தாலும் தவெக சந்திக்க தயாராக உள்ளது.
* உதயநிதி உத்தரவின் பேரில் த.வெ.க. எம்எல்ஏக்களிடம் பணம் கொடுப்பதாக பேரம் பேசி உள்ளனர்.
* ஒரு சில எம்எல்ஏக்கள் மிரட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு எம்எல்ஏ புகாரளித்துள்ளார்.
* கைது செய்யப்பட்ட நரேஷ் தொடர்ந்து செந்தில்பாலஜியுடன் தொடர்பில் இருக்கிறார்.
* பேரம் பேசியவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றனர்.
* தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்.
* யாரிடமும் தமிழக வெற்றிக்கழகம் பேரம் பேசவில்லை.
* த.வெ.க. எம்எல்ஏக்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.
* ஆளுநருக்கு கடிதம் எழுதும் ஆர்.எஸ்.பாரதியிடம் குதிரை பேர குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.