

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக “சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்கு வரத்து அட்டை)” அறிமுகப்படுத்தியது.
இந்தியா முழுவதும் உள்ள பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் நாளை (1-ந்தேதி) முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
எனவே மெட்ரோ ரெயில் பயண அட்டை நாளை முதல் செல்லாது. இது தொடர்பாக ஏற்கனவே மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.