

மெட்ரோ ரெயில் பாதை பணிக்காக எல்.பி. சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி முதல் எம்.ஜி. சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்பட உள்ளதால் நாளை (27-ந்தேதி) முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-
* திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எல்.பி முதல் எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு எம்.ஜி. சாலை சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றப்படுகிறது.
* அதே போல், பெசன்ட் நகரில் இருந்து 7-வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள்-மகாத்மா காந்தி சாலை அடைந்து வலது புறம் திரும்பி சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை இடது புறம் திரும்பி சாஸ்தரி நகர் 1-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலை அடையுமாறு போக்கு வரத்து மாற்றப்படுகிறது.
* எல்.பி. சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் சாஸ்திரிநகர் 1-வது அவென்யூ சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி 11-வது குறுக்கு சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி 8வது குறுக்கு சாலை அடைந்து பின்பு வலதுபுறம் திரும்பி 10-வது குறுக்கு சாலை வழியாக எம்.ஜி. சாலை அடைந்து அவர்களின் இலக்குகளை அடையாலம்.
* இதுவரையில் சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையில் இருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக எல்.பி. சாலை வரையிலும், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ சாலையில் இருந்து சாஸ்திரிநகர் 1-வது பிரதான சாலை வரை ஒரு வழிப்பாதையாக இருந்த சாலை தற்போது இருவழி பாதையாக மாற்றப்படுகிறது.
* அதே போல், சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும் மற்றும் 11-வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
* திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மற்ற வாகனங்கள் அனைத்தும் எல்.பி. சாலை கூட்டு ரோட்டில் எம்.ஜி. சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி இந்திரா நகர் 2வது அவென்யூ சாலை அடைந்து வலது புறம் திரும்பி 1வது பிரதான சாலை வழியாக வலது மற்றும் இடது புறம் திரும்பி 1 வது அவென்யூ சாலை அடைந்து வலது புறம் திரும்பி எல்.பி. எக்ஸ் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பு அடைந்து இடது புறம் திரும்பி பின் தங்கள் இலக்குகளை அடையலாம்.
* இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன. பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்குமாறும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.