

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது திருமாவளவன் கூறியதாவது:-
ரீல்ஸ் போடுவதில் அமைச்சர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், உலக அளவிலும் நாடு முழுவதும் வழக்கமாக மாறி இருக்கிறது. ஒருவர் மட்டும் ரீல்ஸ் போடுவதாக கூற முடியாது. சமூக ஊடகங்கள் வலிமை உள்ள இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரின் அசைவுகளை பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக மாறி இருக்கிறது. அது பொதுவெளியில் ஒழுக்கக்கேடாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறேன். இதனை அமைச்சர்கள் உள்வாங்கிக் கொள்வார்கள், தவிர்ப்பார்கள் என்று கருதுகிறேன். த.வெ.க. அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்ததால் கூட்டணியில் இணைந்ததாக பொருள் இல்லை என்று கூறினார்.
திருமாவளவனின் இந்த பேச்சு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் கூறுகையில்,
அமைச்சரவையில் இடம்பெற்றாலே த.வெ.க. கூட்டணியில் விசிகவும் ஒரு பகுதி தான். கூட்டணி தொடர்பாக திருமாவளவன் வார்த்தைகளில் விளையாட வேண்டாம். குழப்பமும் வேண்டாம். ஆட்சிக்கு ஆதரவு தந்து உள்ளே வந்துவிட்ட பிறகு வேறு மாதிரி பேசுவதுவெட்டி வேலை என்றார்.
மேலும் மாணிக்கம் தாகூர் பேசுகையில், தவெக தலைமையில் நல்ல கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியை சோபா மாடல் ஆட்சி என எதை சொன்னாலும் நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம் என்று கூறினார்.