TN Assembly Election | அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அமமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
TN Assembly Election | அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Published on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஆளுங்கட்சி முதல் புதிய கட்சிகள் வரை தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அதன்படி, சைதாப்பேட்டை- செந்தமிழன், திருச்சி மேற்கு- ராஜசேகரன், பெரியகுளம்- டாக்டர் கதிர்காமு,

மடத்துக்குளம்- சண்முகவேலு, திருப்பத்தூர்- ஞானசேகரன், காரைக்குடி- தேர்போகி பாண்டி, நாங்குநேரி- இசக்கி முத்து, பெரியகுளம் (தனி)- கதிர்காமு, மன்னார்குடி- எஸ்.காமராஜ், திருவையாறு- கார்த்திகேயன், பூந்தமல்லி (தனி)- ஏழுமலை ஆகியோர் அமமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com