திராவிட மாடல் 2.0-விலும் தோழமை தொடர்வோம்!- மு.க.ஸ்டாலின்

ஜனநாயகப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்!
திராவிட மாடல் 2.0-விலும் தோழமை தொடர்வோம்!- மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தோழமைக் கட்சிகளின் விருப்பத்தையும், புதிய கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்துள்ள சூழலையும் உணர்ந்து ஜனநாயகப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்!

தோழமை இயக்கங்களுக்கு நான் அளித்துள்ள வெற்றி உத்தரவாதத்தை நிறைவேற்ற உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டுள்ளதை நேர்காணலில் நன்குணர்ந்தேன்.

234 தொகுதிகளும் நம் தொகுதிகள்தான்! கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களும் நம் சின்னங்கள்தான்!

திராவிட மாடல் 2.0-விலும் தோழமை தொடர்வோம்! களத்தினில் வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com