‘உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை’ - அதிமுகவில் தொடரும் புகைச்சல்

இபிஎஸை விமர்சிக்கும் வகையில் விஜயபாஸ்கர் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை’ - அதிமுகவில் தொடரும் புகைச்சல்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்தது. இத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.

மேலும் சிவி சண்முகம், வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்எல்ஏக்கள், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவு எல்லாம் தெரிவித்தனர். ஆனால் தவெக அமைச்சரவையில் இடம்கிடைக்காத நிலையில் பாதிபேர் மீண்டும் இபிஎஸ் உடன் சுமூகமாக சென்றனர். சிலர் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இருப்பினும் புகைச்சல் ஓயவில்லை. கட்சியில் இன்னும் ஒருசிலர் தவெகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தலைமைதான் என இபிஎஸ்க்கு எதிராக விமர்சனங்களை தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

“உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் ‘வெற்றிக்கான பாதை அல்ல.’

வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல. எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com