

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில் கூறியிருப்பதாவது:-
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச் சம்பவங்களை பார்க்கும்போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModel அரசு அமைஞ்சது முதல், கொலை- கொள்ளை- பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறதுதான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.