

பாலக்கோடு தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் கடந்த 2021-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 8 முறையும், தி.மு.க 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும், வெற்றி பெற்றுள்ளன.
பாலக்கோடு தொகுதியில் 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 5 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் 2026- சட்டமன்ற தேர்தலில் தனது பாலக்கோடு தொகுதியில் 6-வது முறையாக கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார்.
கடைசியாக நடந்த 2021 சட்டசபை தேர்தலில் கே.பி.அன்பழகனை எதிர்த்து தி.மு.க.சார்பில் பி.கே.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைச்செல்வி. தே.மு.தி.க. சார்பில் விஜயசங்கர், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜசேகரும் போட்டியிட்டனர்.