

கோவை மாதம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி கூறியதாவது:
* யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பாதீர்கள் என்றார் தந்தை பெரியார்.
* இன்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்பை நம்பாதீர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
* வாட்ஸ் அப் யூனிவர்சிட்டிகள் மூலம் சிந்தனை போக்குகளை மாற்றி அமைக்கின்றனர்.
* சுதந்திரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் பெண் அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.
* திமுகவின் அனைத்து ஆட்சியிலும் பெண் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள்.
* தற்போது தான் தமிழகத்தில் முதல் முறையாக பெண் அமைச்சர்கள் என பரப்புகிறார்கள்.
* இன்ஸ்டாகிராமில் யார் எதை சொன்னாலும் சொல்பவர் யார் என பாருங்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.