50 ஆண்டுகளாக தமிழ் திரைத்துறைக்கு முக்கிய பங்களிப்பு அளித்தவர் பாக்யராஜ் - கனிமொழி

மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படைப்புகளைத் தந்த பாக்யராஜ் 'திரைக்கதை மன்னன்' என்று புகழப்பட்டவர்.
Bhagyaraj - Kanimozhi
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் இன்று திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு திமுக எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழின் முன்னணி திரைக்கலைஞர் பாக்யராஜ் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது ஜனரஞ்சகமான படைப்புகளால் தடம் பதித்து, ஐம்பதாண்டுகளாக தமிழ்த் திரைத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளை அளித்தவர். தனது திரைக்கதைகளில் மனித மனங்களின் உளவியலை பிரதானமாக வைத்து தமிழில் பல முக்கிய மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படைப்புகளைத் தந்த அவர், 'திரைக்கதை மன்னன்' என்று புகழப்பட்டவர்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com