ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும்போதும் தி.மு.க தானா..?- முதலமைச்சர் விஜய்க்கு எழிலன் கேள்வி

டெல்லியில் செய்தியாளா்கள் கேட்டபோது கூட முதல்வா் விஜய் சந்திக்க மறுத்துவிட்டாா்.
ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும்போதும் தி.மு.க தானா..?- முதலமைச்சர் விஜய்க்கு எழிலன் கேள்வி
Published on

திருமண விழாவிற்கு சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அங்கும் புலம்புகிறாா் என முதல்வா் விஜய் பேசியதற்கு திமுக மருத்துவரணி செயலாளா் எழிலன் பதிலடி கொடுத்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சுயமாியாதை திருமண மேடைகள்தான் திமுகவின் பிரச்சார மேடை, வரலாறு படித்திருந்தால் முதல்வர் விஜய்க்கு அது தொிந்திருக்கும், ஸ்கிரிப்டை படித்தால் எப்படி தெரியும்?

பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வா்கள் செய்தியாளா்களை சந்திப்பது வழக்கம், ஆனால் முதல்வா் விஜய் சந்திக்கவில்லை

டெல்லியில் செய்தியாளா்கள் கேட்டபோது கூட முதல்வா் விஜய் சந்திக்க மறுத்துவிட்டாா்.

பொறுப்பு அவர் முதல்வர் விஜய்) கைகளில் இருக்கிறது. மக்கள் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், ஆளுங்கட்சி ஆவதற்கு முன்பு தேர்தல் பரப்புரையின் போது கையாண்ட அதே யுக்தியை கையாள்கிறார் முதல்வர் விஜய்.

விஜய் இன்று தமிழ்நாடு முதல்வராக பேசினாரா? அல்லது தவெக தலைவராக பேசினாரா? என்று தெரியவில்லை. முன்னர்தான் திமுக, திமுக என்று பேசிக்கொண்டு இருந்தார் என்றால் இன்று ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும்போதும் திமுக, திமுக என்றே பேசிக்கொண்டு இருக்கிறார்.

மக்கள் கொடுத்த அதிகாரத்தை கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

மக்கள் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள், அதனால் தான் நாங்கள் பேச ஆரம்பித்திருக்கிறோம்.

தவெகவின் SOFA மாடல் சந்தி சிரிக்கிறது.. நீங்க நடத்துறது வெளிப்படையான குதிரை பேரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com