தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,340 பேருக்கு கொரோனா- சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.
கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)
கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)
Published on

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,312-ல் இருந்து 2,340- ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 15 ஆயிரத்து 461- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,599 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

இன்று 34,541 கொரோனா ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 618-ல் இருந்து 607 ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 306- பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 149-பேருக்கும், கோவை -165, சேலம் -88, காஞ்சிபுரம், 73, நெல்லை -71 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com