'என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் அதோடு அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்' - விஜய்யை எச்சரிக்கும் அமீர்

நாளை கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.'CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க. அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்'
'என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் அதோடு அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்' - விஜய்யை எச்சரிக்கும் அமீர்
Published on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், விஜய்யை என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காக ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், விஜய்யுடன் தொலைபேசியில் பேசி அவரை என்டிஏ கூட்டணிக்கு வருமாறு வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து இதுவரை இதுதொடர்பாக எதுவும் பேசியதாக தெரியவில்லை. இதனிடையே நாளை கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக மீண்டும் ஆஜராக விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை வைத்து பா.ஜ.க விஜய்யை தன்பக்கம் இழுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் இதுதொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 'CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க. அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்' என விஜய்யின் பெயரை  குறிப்பிடாமல் கூறியுள்ளார். 

பா.ஜ.க. தனது கொள்கை எதிரி என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com