ஜெயலலிதா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றிருந்தால்...: மனம் திறந்த எஸ்.பி.வேலுமணி

அம்மா அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 2011-ல் ஆட்சி, 2016-ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்தார்கள்.அவர்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல்... எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கினார்கள்.
ஜெயலலிதா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றிருந்தால்...: மனம் திறந்த எஸ்.பி.வேலுமணி
Published on

சென்னை செம்மஞ்சேரியில் நடைபெற்ற விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது கூறியதாவது:-

அம்மா அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 2011-ல் ஆட்சி, 2016-ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்தார்கள். அவர்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல்... எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கினார்கள்.

அப்போது மட்டும் அம்மா அவர்கள் அமெரிக்க சென்று சிகிச்சை பெற்றிருந்தால் அம்மா இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். ஆனால் அம்மா கேட்கல... ஆட்சி நல்லா இருக்கனும், கட்சி நல்லா இருக்கனும், ஆட்சியும் கட்சியும் 100 ஆண்டுகள் நல்ல இருக்கனும் சட்டமன்றத்தில் பேசினார்கள்.

இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com