முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்- ஓ.பி.எஸ்

தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்- ஓ.பி.எஸ்
Published on

தேனி மாவட்டம் போடியில் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இதுவரை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கின்ற கருத்துகள் நம்பகத்தன்மை இல்லாதது.

எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க தலைவர் அல்ல. 2017ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை வரிசையாக 10 தோல்விகளை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசியலில் ஒரு ஆளுமைமிக்க தலைவர் என்றால், சட்டமன்ற தேர்தலிலோ, நாடாளுமன்ற தேர்தலிலோ தோல்வியை சந்தித்தால், அடுத்து வரும் தேர்தலில் கட்சியை தூக்கி நிலைநிறுத்தி வெற்றுப்பெறுவது தான் ஆளுமை மிக்க தலைவர். அது இபிஎஸிடம் இல்லை. அவர் படுதோல்வி பழனிசாமி.

இபிஎஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அது பொய்யானது அறிக்கை. இது நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

திமுகவில் தொண்டனாகவே இணைந்திருக்கிறேன். முதலமைச்சர் அவர்கள் வேட்பாளர் பட்டியலில் யாரெல்லாம் பெயர் இடம்பெற்றிருக்கிறதோ அவர்கள் எல்லாம் தகுதியானர்கள்.

தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதில் இருந்தே தெரிகிறது டெல்லி சொல்வதைதான் இபிஎஸ் கேட்கிறார்.

முதலமைச்சர் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com