தி.மு.க.வை வேரோடு கலைவதற்கான அனைத்து செயல்களையும் பா.ஜ.க. செய்யும்- எச்.ராஜா

தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை.இப்போது 500 டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறந்திருக்கிறார்கள்.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

மானாமதுரை:

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மானாமதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தமிழக ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் (தி.மு.க.) முடிவு பண்ண முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கையெழுத்தாக இருக்கும் என கனிமொழி சொன்னார். ஆனால் இப்போது இன்னும் 500 கடைகள் அதிகமாக திறந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். அதற்கு காரணம் டாஸ்மாக். எனவே தி.மு.க.வை வேரோடு கலைவதற்கான அனைத்து செயல்களையும் பா.ஜ.க.செய்யும். தமிழகத்தில் தினமும் கொலைகள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com