

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் நாளை காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 27 மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்காலில் நாளை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.