

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமிக்கு என்ன பேசுவது எதைப்பேசுவது என்று ஒன்றும் தெரியவில்லை. அவர் தூங்காமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால், அவர் என்ன சொன்னாலும் அது உளறல்.
எடப்பாடியின் உளறருக்கு எல்லாம் நாம் பதில் அளிக்கவேண்டியது இல்லை. பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது திமுக. எனவே நாங்கள் பெண்களுக்கு துரோகம் செய்யவே மாட்டோம்.
எனவே பெண் வாக்காளர்கள்தான் எங்களுடைய வாக்கு வங்கி. அந்த வாக்குவங்கியில் கையை வைப்பதற்காக இப்படி ஒரு சதிச்செயலை அவர்கள் செய்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்ப மாட்டார்கள்.
இந்த மசோதாவை தேர்தல் நடக்கும் நேரத்தில் கொண்டு வர அவசியமே கிடையாது.
ஆனால், இதை அவசரமாக கொண்டு வந்ததே தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஏதேவது பிரச்சனையை கிளப்பிவிடலாமா என்கிற கண்ணோட்டத்தில்தான். எந்த பிரச்சனையையும் அவர்கள் கிளப்பமுடியாது.
தமிழ்நாட்டு மக்களையும் எங்கள் தலைவரையும் பிரிக்க முடியாது.
அமித் ஷா வாயால் சொல்வதை என்றைக்காவது செய்திருக்கிறாரா? வாயால் வடை சுட்டுவிட்டு போய்விடுவார். ஏமாற்றிவிடுவார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.