அதிகரிக்கும் ஆதரவு - சட்டப்பேரவை செயலாளரை சந்தித்த இபிஎஸ் தரப்பு!

இபிஎஸை சந்தித்து பாலகிருஷ்ணா ரெட்டி ஆதரவுக் கடிதம்.
அதிகரிக்கும் ஆதரவு - சட்டப்பேரவை செயலாளரை சந்தித்த இபிஎஸ் தரப்பு!
Published on

தவெக தரப்பில் அமைச்சர் பதவிக்கு அழைக்கப்படாத நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகின்றனர்.

நேற்று 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸை சந்தித்த நிலையில், இன்று நத்தம் விஸ்வநாதன், திருத்தணி ஹரி, புவனகிரி அருண் மொழித்தேவன், பழனி ரவி மனோகரன், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இபிஎஸை சந்தித்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து ஓ.எஸ்.மணியன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட இபிஎஸ் தரப்பு சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து, புதிய ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதத்தை வழங்கியுள்ளது. மேலும் திரும்பி வந்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் சட்ட நடவடிக்கை வேண்டாம் எனவும் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com