

கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை கவர்னரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது.
கவர்னர் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின் போதும் 10 காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது, பிரதமர் மோடி இந்திய நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள 7 வேண்டுகோள்களில் ஒன்றான பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறையுங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் என்பதை கருத்தில் கொண்டு, கவர்னருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4-ஆக குறைக்கப்பட்டுள்ளது.