மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - டாஸ்மாக் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை

கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடை பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை  - டாஸ்மாக் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய இயக்குனராக நந்த குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடை பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மது பானம் விற்றால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பது குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும், மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com