விழுப்புரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி காலாப்பட்டிலிருந்து பைக்கில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு.
விழுப்புரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
Published on

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்து, முன்னாள் சென்ற பைக் மீது மோதியதில் 3 பேர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி காலாப்பட்டிலிருந்து பைக்கில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலின், கார்த்திக், சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com