தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது.தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
Published on

சென்னை:

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்தாலும், அன்றைய தினம் தங்கம் விற்பனை அதிகமாகவே இருந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலை குறையத் தொடங்கியது.

அதன்படி, 11, 13 (நேற்று முன்தினம்) மற்றும் 14-ந்தேதி (நேற்று) என 3 நாட்களாக விலை சரிந்து வருகிறது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com