

சென்னை:
தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை கடந்த 26-ந்தேதி முதல் குறைந்து கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக நேற்றும் விலை இறங்குமுகத்தை சந்தித்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
28-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
27-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200
26-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840
25-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240
24-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840
28-05-2026- ஒரு கிராம் ரூ.285
27-05-2026- ஒரு கிராம் ரூ.290
26-05-2026- ஒரு கிராம் ரூ.295
25-05-2026- ஒரு கிராம் ரூ.295
24-05-2026- ஒரு கிராம் ரூ.295