

தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை மத்திய அரசு 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக கடந்த வாரம் உயர்த்தியது. இந்த வரி உயர்வினால் தங்கம், வெள்ளி விலை என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனால் கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. வார கடைசிநாளான சனிக்கிழமை தங்கம் ஒரு கிராம் ரூ.14,750-க்கும் சவரன் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் 290-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கும் சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆனால் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.