

நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 6-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 100 ஆகவும், சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 7-ந்தேதி விலை சற்று உயர்வை கண்டது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.14 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. தொடர்ச்சியாக 3 நாட்கள் அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே, தங்கம் விலை நேற்று மாற்றத்தை கண்டது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14 ஆயிரத்து 100-க்கும். சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போல் வெள்ளியும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.