GOLD PRICE TODAY : வார இறுதி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 430-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.
தங்கம்
Published on

சென்னை:

தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக இறங்கு முகமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 480-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 840-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 430-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வாரதி இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து கிராம் 14,200 ரூபாய்க்கும் சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல வெள்ளியின் விலை கிராம் ரூ.280-ல் இருந்து ரூ.10 குறைந்து ரூ.270-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,440

04-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,840

03-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

02-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

01-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

05-06-2026- ஒரு கிராம் ரூ.280

04-06-2026- ஒரு கிராம் ரூ.285

03-06-2026- ஒரு கிராம் ரூ.290

02-06-2026- ஒரு கிராம் ரூ.290

01-06-2026- ஒரு கிராம் ரூ.290

X

Maalai Malar
www.maalaimalar.com