

சென்னை:
கடந்த வாரம் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் காணப்பட்ட நிலையில் வார இறுதி நாளில் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.
அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் உயரும் என்று எதிர்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,810-க்கும் சவரனுக்கு 1120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வார தொடக்கநாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
05-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
04-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
03-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,800
02-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000
01-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,400
05-04-2026- ஒரு கிராம் ரூ.255
04-04-2026- ஒரு கிராம் ரூ.255
03-04-2026- ஒரு கிராம் ரூ.255
02-04-2026- ஒரு கிராம் ரூ.255
01-04-2026- ஒரு கிராம் ரூ.265