

சென்னை:
தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்தது. அதனை தொடர்ந்து மாத தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,480 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 6 நாட்களாக விலை மாற்றமின்றி இருந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 5ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
03-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
02-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
01-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
31-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040
30-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040
03-06-2026- ஒரு கிராம் ரூ.290
02-06-2026- ஒரு கிராம் ரூ.290
01-06-2026- ஒரு கிராம் ரூ.290
31-05-2026- ஒரு கிராம் ரூ.290
30-05-2026- ஒரு கிராம் ரூ.290