

தங்கம் விலை கடந்த மாதம் (ஜூன்) தொடக்கத்தில் இருந்து ஏற்ற-இறக்கத்துடன், பின்னர் சில நாட்கள் வெகுவாக இறங்குமுகத்திலும் காணப்பட்டது.
கடந்த மாதம் 30-ந்தேதியில் இருந்து ஒரே நாளில் இருமுறை மாற்றம் என்ற வகையில், தங்கம் விலை நீடிப்பதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் 3-வது நாளாக ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை மாற்றத்தை சந்தித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலையிலும் மீண்டும் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் மேலும் அதிகரித்தது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
02-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,400
01-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000
30-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600
29-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
28-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960
02-07-2026- ஒரு கிராம் ரூ.255
01-07-2026- ஒரு கிராம் ரூ.245
30-06-2026- ஒரு கிராம் ரூ.245
29-06-2026- ஒரு கிராம் ரூ.245
28-06-2026- ஒரு கிராம் ரூ.245