GOLD PRICE TODAY : தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
gold bangles
Published on

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கம் கண்டு வந்து, கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் விலை மளமளவென சரிந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை மாற்றம் கண்டது. காலையில் ரூ.2,160 குறைந்து, மாலையில் ரூ.1,360 உயர்ந்தது. 2-வது நாளாக நேற்றும் ஒரே நாளில் இருமுறை விலை மாற்றம் இருந்தது.

அதன்படி, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. ஆக மொத்தம் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

01-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000

30-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

29-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

28-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

27-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

01-07-2026- ஒரு கிராம் ரூ.245

30-06-2026- ஒரு கிராம் ரூ.245

29-06-2026- ஒரு கிராம் ரூ.245

28-06-2026- ஒரு கிராம் ரூ.245

27-06-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com