என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    • கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகில் உள்ள முட்டம் என்ற கிராமத்தில் கள்ள சாராய வியாபாரத்தை தடுத்த கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து கொலையானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×