அ.தி.மு.க. தலைமையிலான NDA கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் விழிப்போடு, பொறுப்போடு பணியாற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்

தங்கு தடையின்றி தாமதமின்றி புதிய ஆட்சி அமைவதற்கான அறிவிப்பை எதிர்பார்ப்பதற்கு வாக்கு எண்ணும் இடங்களிலே விழிப்போடு, கவனத்துடன் செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க. தலைமையிலான NDA கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள்  விழிப்போடு, பொறுப்போடு பணியாற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்
Published on

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மாற்றம் முன்னேற்றம் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்ற நல்ல நாள். அதற்கேற்றவாறு மக்களுடைய நம்பிக்கையை தேர்தல் களத்திலே பெற்ற கூட்டணி அ.இ.அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள்.

அந்த வகையில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையிலே அழைத்துச் செல்லக்கூடிய நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் பணி வளமான தமிழகம் ஏற்பட வழிவகுக்க வேண்டும். அதற்கு தங்கு தடையின்றி தாமதமின்றி புதிய ஆட்சி அமைவதற்கான அறிவிப்பை எதிர்பார்ப்பதற்கு வாக்கு எண்ணும் இடங்களிலே விழிப்போடு, கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும்.

எனவே நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் இடங்களில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து பொறுப்போடு பணியாற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com