TN Assembly Election| சரியாக 12.12 மணிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு- ஜி.கே.வாசன்

சின்னம் என்பதை விட களப்பணியும், கூட்டணியின் பலமும் முக்கியம்.
TN Assembly Election| சரியாக 12.12 மணிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு- ஜி.கே.வாசன்
Published on

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், சரியாக 12.12 மணிக்கு வேட்பாளர்களை அறிவிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர்கூறுகையில், 12.12 என்பது நல்ல நேரம் என நம்புவதால் அந்த நேரத்தில் வேட்பாளர்களை அறிவிக்கிறேன்.

சைக்கிள் சின்னத்தை ஒதுக்க முடியது என தேர்தல் ஆணையம் கூறியது. சைக்கிள் சின்னம் கிடைக்காததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். சின்னம் என்பதை விட களப்பணியும், கூட்டணியின் பலமும் முக்கியம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com