ஈரோட்டில் 13-ந்தேதி ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற 13-ந்தேதி பிரசாரம் செய்கிறார். வீரப்பன் சத்திரம் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஜி.கே.வாசன் மொத்தம் 11 இடங்களுக்கு சென்று ஆதரவு திரட்டுகிறார்.
ஈரோட்டில் 13-ந்தேதி ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம்
Published on

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஜி.கே.வாசன் மொத்தம் 11 இடங்களுக்கு சென்று ஆதரவு திரட்டுகிறார்.

வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தர் சாலை, நாராயண வலசு, அம்பேத்கர் நகர், நியூ டீச்சர்ஸ் காலனி, திருமால் நகர், கலெக்டர் அலுவலகம் அருகில் சம்பத் நகர், பெரிய வலசு, 4 ரோடு, அப்பன்நகர், கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, பன்னீர் செல்வம் பூங்கா பகுதி, பெரியார் நகர், காந்திஜி ரோடு, காளை மாடு சிலை பகுதி, பழனியப்பா வீதி உள்ளிட்ட இடங்களில் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்த தகவலை த.மா.கா. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com