அங்கன்வாடி மையம் உட்பட மாதவரம் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் V மூர்த்தி

அலமாதி மற்றும் எடப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசு இலவச வீட்டுமனைப்பட்டா 426 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
அங்கன்வாடி மையம் உட்பட மாதவரம் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் V மூர்த்தி
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய நாளில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4-ந்தேதி எண்ணப்படுகின்றனர். இதனிடையே, வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே அ.தி.மு.க. சார்பில் மாதவரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி போட்டியிடுகிறார். இதனால் தனது ஆதரவாளர்களுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகித்த போது செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் விவரம் வருமாறு:-

நெற்குன்றம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட பணிகள்

1. குழந்தைகள் அங்கன்வாடி மையம்.

2. அம்மா பேருந்து நிழற்குடை.

3. ஆரம்ப துணை சுகாதார மையம் (அம்மா மினி கிளினிக்)

4. ஐயர் தெரு மற்றும் பாகவதர் தெரு பகுதிகளுக்கு சிமெண்ட் சாலை அமைத்தது.

5. ஆரம்ப பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தது.

6. கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியது.

* தெலுங்கு காலனி பகுதிக்கு தார் சாலை அமைத்தது.

* மேட்டு சூரப்பட்டு கிராம பகுதிக்கு தார்சாலைகள் அமைத்தது.

* அல்லிநகர் பகுதிக்கு அதிக வோல்ட் உள்ள புதிய மின்மாற்றி அமைத்தது.

* பள்ள சூரப்பட்டு பகுதி பெருமாள் கோவில் தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைத்தது.

* ஆட்டந்தாங்கல் பாலம்

* பாடியநல்லூர் ஆலமரம் ஏரி பாலம் பழைய பாலம் சேதம் அடைந்ததால் புதிய பாலம் கொண்டு வரப்பட்டது.

* 2011-ம் ஆண்டு கால கட்டங்களில் சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் V மூர்த்தி அவர்களின் முயற்சியில் அம்மா மினி பஸ் சேவை தொடங்கப்பட்டது.

* அலமாதி ஊராட்சி நல திட்டம்

1. அலமாதி பள்ளி தரம் உயர்த்தப்பட்டது.

2. அலமாதியில் 24 மணி நேர அரசு மருத்துவமனைக்கு 40 லட்சம் ரூபாயில் மருத்துவமனை கட்டிடம்.

3. எடபாளயம் பள்ளி தரம் உயர்த்தப்பட்டது.

4. A,B,C, காலனிக்கு என்று தனியாக நியாயவிலைக்கடை 6.5 லட்சம் ரூபாயில் நியாயவிலைக்கடைக்கு கட்டிடம்.

5. அலமாதி மற்றும் எடப்பானைமம் பகுதியில் ரூ.11 லட்சத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் ரூ.5.50 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

6. அலமாதி மற்றும் எடப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசு இலவச வீட்டுமனைப்பட்டா 426 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

7. அலமாதியில் அம்மா திட்டம் மூலமாக விதவை தாய்மார்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 670 பேர் பயன் பெற்றனர்.

8. 120 குடும்பங்களுக்கு விலையில்லா ஆடுகள்.

9. 50 குடும்பங்களுக்கு விலையில்லா கறவை மாடுகள்.

10. அலமாதி பள்ளி கட்டிடம் நபார்டு திட்டம் மூலமாக 1.5 கோடி ரூபாயில் புதிய கட்டிடம்.

11. அலமாதியில் அமைத்துள்ள 4 பள்ளிகளுக்கும் RO Plant தலா 5 லட்சம் செலவில் மொத்தம் 20 லட்சத்தில் அமைத்து தரப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com