செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை துறக்கும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.

நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை துறக்கும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.
Published on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

* அ.தி.மு.க.வில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்.

* செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.

* நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.

* தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

நேற்று செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com