மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் உள்ளன - தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.
மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் உள்ளன - தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் பதில் அளித்துள்ளார்.

* தமிழக அரசின் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டது.

* மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை.

* தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரெயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை.

* கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை.

* கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.

* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கியதை முதலமைச்சர் மறைத்துவிட்டார்.

* மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com