குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
Published on

தமிழகத்தில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடத்தி வருகிறது.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வபோது, பிரச்சாரங்களுக்கு பயணிக்கும் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களின் வாகனங்களையும், அவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகையில் தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com