அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம்
Published on

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 27, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 169 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது.

இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com