

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தப்படி 8-ந் தேதி (அதாவது நாளை), 9-ந் தேதியும் என 2 நாட்கள் சென்னையில் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதன்படி நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வேளச்சேரி காந்தி ரோடு ஜங்ஷன், காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை 5 லைட், ஆலந்தூர் ரோடு, காலை 11 மணி விருகம்பாக்கம் அருணாச்சலம் ரோடு, மாலை 4 மணி தியாகராயநகர் சி.ஐ.டி.நகர், மாலை 5 மணி அண்ணாநகர் டிபி. சத்திரம், மாலை 6 மணி வில்லிவாக்கம் எம்.டி.எச். ரோடு, இரவு 7 மணி கொளத்தூர் அருள்மிகு லட்சுமி அம்மாள் கோவில் அருகில், இரவு 8 மணி பெரம்பூர் அசோக் பில்லர் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.
9-ந் தேதி காலை 9 மணி சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி இரு சப்ப தெரு (டாக்டர் நடேசன் சாலை), காலை 10 மணி ஆயிரம் விளக்கு கருமாரியம்மன் கோவில் (புஷ்பா நகர்), மாலை 4 மணி ராயபுரம் பெரியபாளையத்தம்மன் நகர் அருகில் (திருவொற்றியூர் நெடுஞ்சாலை), மாலை 5 மணி துறைமுகம் அரசு அச்சகம் அருகில் (தங்கசாலை), மாலை 6 மணி திரு.வி.க. நகர் மற்றும் எழும்பூர் அம்பிகா ஓட்டல் அருகில் (புளியந்தோப்பு நெடுஞ்சாலை) ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.