மேகதாது அணை தீர்மானம் தொடர்பாக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை - இபிஎஸ்

மேகதாது தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவை அதிமுக ஏற்கவில்லை.
மேகதாது அணை தீர்மானம் தொடர்பாக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை - இபிஎஸ்
Published on

மேகதாது விவகாரத்தில் உரிமை மீறல் குறித்து பேச அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அவை உரிமையை மீறி நடந்துகொண்டதாக கூறி உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்து இபிஎஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சட்டசபையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மேகதாது தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவை அதிமுக ஏற்கவில்லை.

* மேகதாது தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து சட்டசபையில் முன்னதாக தெரிவித்திருக்க வேண்டும்.

* தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து அறிவிக்காதது விதிமீறல்.

* அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவித்து விவாதத்திற்கு பின்னரே தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும்.

* மேகதாது அணை தீர்மானம் தொடர்பாக பேசுவதற்கு எங்களை சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com