மேகதாது அணை விவகாரம்: புதிய நடுவர் மன்றம் சரியான தீர்வு- தங்கம் தென்னரசு

நடுவர் மன்றம் அமைக்கப்படுவது ஏற்கெனவே 2018-ல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்காது.
DMK Ex Minister Thangam Thennarasu
Published on

திமுக கொண்டுவந்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதுகுறித்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

மேகதாது பிரச்சனையை கவனமாக கையாவில்லை என்றால் மத்திய நீர் வளத்துறை வசம் சென்று நாம் டிராப்புக்குள் சிக்கிக்கொள்வோம்.

புதிய நடுவர் மன்றம் அமைப்பது சிறந்தது என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆலோனை வழங்கினர்.

ஆலோசனை அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 4.3.2026-ல் புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் அது விவசாயிகள் நலன் காக்க எடுக்கப்பட்ட தமிழக அரசின் முடிவு. அரசியல் கருத்து வேறுபாடை கடந்து நமது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.

நடுவர் மன்றம் அமைக்கப்படுவது ஏற்கெனவே 2018-ல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்காது.

கர்நாடகா ஏற்கனவே அணைகட்ட முயற்சித்தபோது தமிழக அரசு அதை தடுத்தது. தீர்மானத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்பது என்பது நமக்குள் பிளவு இருப்பதாக காட்சி அரசியல் சூழலாக்கிவிடும்.

தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது மாறுபட்ட கருத்து எனில் அப்போதே தெரிவித்திருக்க வேண்டும்.

ஓரணியில் இருந்து அனைத்து அரசியல் கட்சியும் ஒருமனதாக இதை ஏற்கவேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com