கோவையில் நடந்த விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நபர் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட ஆள் தேவையா. செங்கோட்டையன் பள்ளி விழாவில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும்போது கருணாநிதி, ஸ்டாலின் படம் வைத்திருந்தார். அப்போதே அவர் தி.மு.க. பி டீமிற்கு சென்று விட்டார். தி.மு.க.வின் உளவாளியாக மாறிவிட்டார். அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைக்கும் உளவாளியாக இருந்தவர். சட்டமன்றத்தில் தி.மு.க.வை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. இவர் மன்னிக்க முடியாத ஆள்.
என் மீது அடுக்கடுக்காக புகார் கூறுகிறார். நெடுஞ்சாலை டெண்டர் புகார் என் மீது கூறப்பட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குற்றம் அற்றவர் என்று நிரூபித்தவன். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 94 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். தற்போது சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மக்கள் என்னை ஒருவராக பார்க்கிறார்கள். மக்களை நான் நீதிபதியாக பார்க்கிறேன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. வேட்பாளர் அமைதியானவர். அன்பானவர். இதற்கு முன்பு இருந்த எம்.எல்.ஏ. போன்று திமிரு பிடிச்சவர் இல்லை.
இந்த தொகுதியில் ஒருத்தர் இருந்தார் .அவரைப்பற்றி நான் பேசியாக வேண்டும். அவர் தானாக எம்.எல்.ஏ. ஆகவில்லை, மக்களாகிய உங்கள் உழைப்பால் எம்.எல்.ஏ. ஆனார். சுயநலம், திமிரு, அகங்காரம் ஆகியவற்றால் அவர் கட்சியில் வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கட்சிக்கு கட்டுப்பாடு அவசியம். நம்ம அம்மா காலம் முதல் நாம் அதை கடைப்பிடித்து வருகிறோம்.
செங்கோட்டையன் இங்குள்ள நிர்வாகிகளை சந்திக்க விட மாட்டார். ஏராளமானவர்களை கட்சியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். ஒவ்வொரு வீட்டிலும் மனைவி தனது கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அம்மாவின் ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது அவரது மனைவி, மகன் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து செங்கோட்டையன் மீது புகார் அளித்தனர்.
அது கேவலமான புகார். அதுகுறித்து நான் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் புகார் தெரிவித்தபோது நானும் அங்குதான் இருந்தேன். அம்மாவிடம் புகார் அளித்த உடன் அவரது பதவியை அம்மா பறித்து விட்டார். அவர் அம்மாவிற்கு விசுவாசம் இல்லாதவர்.
அப்படிப்பட்ட நபரை நான் மீண்டும் எனது அமைச்சரவையில் சேர்த்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அவர் என்னிடம் அழுது பேசி பதவியை வாங்கினார். அவர் ஒரு காலத்தில் எனக்கு நண்பராக இருந்தார். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நன்றி மறப்பது நன்றன்று இல்லை, அன்றே மறப்பது நன்று என்பது போல் மாறிவிட்டார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் இப்பகுதி மக்களின் 65 ஆண்டு கால திட்டமாகும். அதற்கு அப்போதைய மாநில அரசு, அதாவது எனது தலைமையிலான அரசு 1652 கோடி நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றினோம். திட்டத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். கொரோனா காலத்தால் சிறிது தடைபட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தி.மு.க.வினர் திட்டத்தை திறந்து வைத்தனர். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்து சென்று விட்டார்.
கோவையில் நடந்த விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நபர் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட ஆள் தேவையா. செங்கோட்டையன் பள்ளி விழாவில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும்போது கருணாநிதி, ஸ்டாலின் படம் வைத்திருந்தார். அப்போதே அவர் தி.மு.க. பி டீமிற்கு சென்று விட்டார். தி.மு.க.வின் உளவாளியாக மாறிவிட்டார். அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைக்கும் உளவாளியாக இருந்தவர். சட்டமன்றத்தில் தி.மு.க.வை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. இவர் மன்னிக்க முடியாத ஆள்.
என் மீது அடுக்கடுக்காக புகார் கூறுகிறார். நெடுஞ்சாலை டெண்டர் புகார் என் மீது கூறப்பட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குற்றம் அற்றவர் என்று நிரூபித்தவன். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 94 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். தற்போது சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மக்கள் என்னை ஒருவராக பார்க்கிறார்கள். மக்களை நான் நீதிபதியாக பார்க்கிறேன்.
நீங்கள் அடிமையாக பார்க்கிறீர்கள். ஓட்டு வீட்டில் இருந்து நீங்கள் எப்படி பங்களா வீட்டுக்கு வந்தீர்கள். 30 ஏக்கர் காலேஜ் எப்படி வந்தது. இப்படி உங்களை பற்றி பேசிக்கொண்டே செல்லலாம். செங்கோட்டையன், பணக்காரர்களை பார்த்தால் மட்டும் தான் பேசுவார். அவர் யாரையும் வளர விட மாட்டார்.
தற்போது இந்த தொகுதியில் இந்த மனிதர் போட்டியிடுகிறார். அவரை படுதோல்வி அடைய மக்கள் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்னால் எனது தொகுதியில் வெற்றி பெற முடியும். அதைப்போல் உங்களால் உங்கள் தொகுதியில் வெற்றி வர முடியுமா. நான் சவால் விடுகிறேன். உங்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேசினால் நீங்கள் வீதியில் நடமாட முடியாது. தொகுதியில் நடமாட முடியாது.
எனவே, இனியும் அரசியல் ரீதியாக கருத்துக்களை வைத்தால் பதில் சொல்கிறேன். தனிப்பட்ட முறையில் வைத்தால் நானும் பேசுவேன்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் குறித்து விரிவாக பேசினார். இறுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பெயிலியர் அரசு அதிமுக வின்னிங் நல்ல கட்சி கம்மிங் என்று கூறி தனது உரையை முடித்தார்.