TN Election 2026 | எடப்பாடி பழனிசாமி வாஷிங் மெஷினுக்குள் போய்ட்டாரு: கனிமொழி எம்.பி.

எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் பிரிட்ஜ் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். அவர் வாஷிங் மெஷின் கொடுப்பதாக சொல்லியிருக்கலாம். ஏனென்றால், அந்த கூட்டணிக்கு அதுதான் சரியாக இருந்திருக்கும் என கனிமொழி கிண்டல் செய்துள்ளார்.
TN Election 2026 | எடப்பாடி பழனிசாமி வாஷிங் மெஷினுக்குள் போய்ட்டாரு: கனிமொழி எம்.பி.
Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தன்னை காப்பாற்றிக் கொள்ள.., பாஜக என்கிற என்ற பெரிய வாஷிங் மெஷின் இருக்கும், அது நிஜமாகவே வாஷிங் மெஷின்தான்.

எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் பிரிட்ஜ் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். அவர் வாஷிங் மெஷின் கொடுப்பதாக சொல்லியிருக்கலாம். ஏனென்றால், அந்த கூட்டணிக்கு அதுதான் சரியாக இருந்திருக்கும். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தால் உங்கள் மீது ஐ.டி. ரெய்டு, சிபிஐ ரெய்டு என எல்லாம் வரும். எதிர்க்கட்சியாக இருந்தால் வழக்கு போடுவார்கள். மிரட்டுவார்கள்.

அதே நபர் பாஜக-வில் சேர்ந்தால் அல்லது கூட்டணி வைத்தால் அடுத்த நாள் சுத்தமாகிவிடுவார்கள். வாஷிங் மெஷினில் தூக்கிப் போட்டு ஒரு சுத்து சுத்துவாங்க. அதன்பின் ஏதுவும் இருக்காது. எல்லாம் காணாமல் போய் விடும்.

தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி வாஷிங் மெஷினுக்குள் போய்ட்டாரு. இன்று அவர்கள் உருவாக்கி இருக்கின்றன கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடிய கூட்டணி.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com