கருணாநிதி குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதி குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம்.
கருணாநிதி குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

கலைஞர் கருணாநிதி குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி கடைசி காலகட்டத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

கலைஞர் தனது தந்தை மட்டுமல்ல கோடிக்கணக்கான தொண்டர்களின் தலைவர். எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை.

முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கலைஞர் கருணாநிதி குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம்.

அரசியல் நாகரிகம் கருதியே மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிகிச்சை முறை, உடல்நிலை குறித்து நாங்கள் பேசுவதில்லை.

கலைஞர் கருணாநிதியின் கடைசி கால சிகிச்சை விவரங்கள் பொதுமக்கள் முன்பு வைக்கப்பட்டன.

கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசினால் திமுக தொண்டனாக பார்த்து கொணடிருக்க முடியாது.

தோல்வி பயத்தின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com