எழும்பூரில் வலுவாக இருக்கும் தி.மு.க... போட்டியாக வந்த த.வெ.க. - மீண்டும் உறுதியாகுமா வெற்றி?

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் திமுகவிற்கே பெரும் ஆதரவு உள்ளது.
எழும்பூரில் வலுவாக இருக்கும் தி.மு.க... போட்டியாக வந்த த.வெ.க. - மீண்டும் வெற்றியை உறுதி செய்யுமா?
Published on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாக உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆளுங்கட்சியான திமுக தனது 'திராவிட மாடல்' ஆட்சியைத் தொடர முனைப்பு காட்டி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது செல்வாக்கை மீட்டெடுக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

மறுபுறம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறது. இதனால் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்பட்ட புதுப்பேட்டை பகுதி மக்களிடையே மாலைமலர் தரப்பில் ஒரு ஜாலி VOX POPS எடுக்கப்பட்டது. அதன்படி அப்பகுதியில் திமுகவிற்கே பெரும் ஆதரவு உள்ளது. இரண்டாவது இடத்தில் தவெக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com