தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை: பிரதமர் மோடி விமர்சனம்

திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெறுப்பு மற்றும் கீழ்த்தரமான அரசியலுக்கு மகளிர் மசோதாவை இரையாக்கினர் என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.
தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை: பிரதமர் மோடி விமர்சனம்
Published on

கோவையில் நடைபெற்றும் வரும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

கோனியம்மனுக்கும், மருதலை முருகனுக்கும் என்னுடைய முதற்கண் பிரார்த்தனையை காணிக்கை ஆக்குகின்றேன். சில நாட்களுக்கு முன்னர்தான் தமிழ் மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். இதை பயன்படுத்தி நால்வாழ்த்துகள் கூறும் வாய்ப்பு கிடைத்தது.

புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கை, புதிய சக்தியை கொணடு வருவது. புதிய தொடக்கம் என்ற இந்த வேளையிலே, தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன்.டி.ஏ.-வின் வெற்றி, திமுக-வின் வெளியேற்றம் என்ற தெளிவான செய்தியை மக்கள் அளிக்கிறார்கள்.

2023-ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினோம். அதை நாம் கடந்த 16-ந்தேதி முன்னெடுத்து வைத்தோம்.

தனிப்பட்ட முறையில் கூட அனைத்துக் கட்சிகளிடம் ஆதரவு கோரினேன். எல்லா பாராட்டுகளையும் நீங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெளிவாக கூறினேன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னுடைய சகோதரிகள் மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் வர வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய ஆசை.

துரதிருஷ்டவசமாக இந்த உயர்வான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெறுப்பு மற்றும் கீழ்த்தரமான அரசியலுக்கு இரையாக்கினார்கள்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழகத்தைச் சேர்ந்த சாதாரண பெண்கள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் ஆகியிருக்கலாம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு அதிக எம்.பி. இடங்கள் கிடைப்பதாக இருந்தது. இதை தெளிவாக திமுக விரும்பவில்லை. திமுக-வின் செயல்கள் அம்பலமாகிவிட்டது. குட்டு வெளிப்பட்டு விட்டது.

கருப்பு உடைகள் அணிந்து திமுக தங்களது தீய எண்ணங்களுக்கு திரை போட்டு விட முடியாது என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய கெட்ட செயலுக்கான பயன்களில் இருந்து இனிமேல் தப்பவே முடியாது. மக்கள் உங்களுடைய உண்மையான முகங்களை தெரிந்து கொண்டார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com